பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் எல்லையில் ஒரு இந்திய ராணுவ வீரர் அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
jawan
அந்த வீரர் பெயர் சந்து சவான், வயது 22. இவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த போர்விகிர் என்ற சிற்றூரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
தனது பேரன் அண்டை நாட்டில் எதிரிகளால் கைது செய்யப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட அவரது பாட்டி லீலாபாய் பாட்டீல் அதிர்ச்சியில் மரணடைந்ததாக கூறப்படுகிறது.
சந்து சவானின் பெற்றோர்களின் மறைவுக்குப்பின் அவரை வளர்த்தவர் அவரது பாட்டியான லீலாபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கிடையே உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுடன் பேசி வீரர் சந்து சவானை மீட்க நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]