பேட்வுமன் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதுவரை பேட்மேன் கதாபாத்திரத்தில் மைக்கேல் கீட்டன், ஜார்ஜ் க்ளூனி, க்றிஸ்டியன் பேல், பென் அஃப்ளெக் உள்ளிட்ட பெரும் நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்தச் சூழலில் பேட்வுமன் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி டிசி காமிக்ஸ் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு ஒரு வெப்சீரிஸை வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த சீசனில் கருப்பினத்தைச் சேர்ந்த பெண்ணான ஜவிசியா லெஸ்லி பேட்வுமனாக நடிக்கவுள்ளார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசி நிறுவனம் வெளியிட்டது. இந்த போஸ்டரில் திருத்தியமைக்கப்பட்ட பேட்வுமன் சூட் இடம்பெற்றுள்ளது.