முசாபர் நகர்:

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உபி.யில் பாஜ அதிக இடங்களை கைப்பற்றியது. ஜாட் சமுதாய விவசாயிகள் அடங்கிய  காப் பஞ்சாயத்துக்களின் ஆதரவு கிடைத்ததால் தான் பாஜவுக்கு இந்த வெற்றி வாய்ப்பு சாத்தியமானது. ஆனால், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் நிலமை தலைகீழாக மாறிவிட்டது.

 

சர்க்கரை அரவை ஆலைகளின் கரும்பு தொகை நிலுவை, பயிர்களுக்கு ஆதரவு விலை நிர்ணயம் இல்லமை, பணமதிப்பிழப்பால் பயிர் கடன் மற்றும் ராபி சாகுபடி பாதிப்பு போன்வற்றால் பாஜவுக்கு எதிராக ஜாட் விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பாஜவை தோற்கடிப்பதை நோக்கம் என்று  பெரும்பாலான  காப் பஞ்சாயத்துக்கள் அறிவித்துவிட்டன.

கடந்த 8ம் தேதி உ.பி. மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்த 35 காப் தலைவர்கள் மற்றும் ஆயிரகணக்கான ஜாட் சமுகத்தினர் ஒன்று கூடினர். ஜத் அரக்ஷன் சங்கர்ஷ் சமிதி ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் பாஜவுக்கு மீண்டும் வாக்களிப்பதில்லை என்ற அறிவித்துவிட்டது.

முஸ்லிம், ஜாட்களுக்கு எதிரான செயல்பாடு, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுப்பு, விவசாயிகள் பிரச்னை, வெளியப்படையான நிர்வாகம் இல்லாமை ஆகியவற்றை முன்வைத்து தலைவர்கள் இதில் பேசினர். மேலும், பிரதமர் மோடி மீதான கோபத்தை அனைவரும் வெளிப்படுத்தினர். வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினர்.

முசாபர் நகரில் 2013ம் ஆண்டில் நடந்த கலவரத்தை தொடர்ந்து பாஜவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதற்கான விலையை ஜாட் சமூகம் பெற்றுவிட்டது. எங்களது குழந்தைகள் சிறைகளில் உள்ளனர். அவர்களுக்கு நீதி கிடைக்க பாஜ நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜ தலைவர்கள் அமைச்சர்கள £கிவிட்டனர்.

ஆனால், அவர்கள் வந்து எங்களை பார்க்கவில்லை என்று குற்றம்சாட்டினர். எங்களின் அரசியல் அடையாளம் அஜித் சிங் தான். அவரை புறக்கணித்துவிட்டு பாஜவுக்கு வாக்களித்தோம். இதனால் நாங்கள் பின்னுக்கு சென்றது தான் மிச்சம். அதனால் இந்த முறை அவருக்கு பின்னால் செல்ல முடிவு செய்துவிட்டோம் என்று 54 கிராமங்களை உ.பி.யில் உள்ளடக்கிய கத்வாலா காப்ஸை சேர்ந்த சவுத்ரி ஹர்கிஷன் சிங் தெரிவித்தார்.

உபி.யில் 84 கிராமங்களை உள்ளடக்கிய பால்யாஜ் காப் தலைவர் சவுத்ரி நரேஷ் திகைத் கூறுகையில், யாருக்கு வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஜாட் சமூகத்திற்கு மட்டும் பாதிப்பு கிடையாது. ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் தான் பாதிப்பு. மோடி அரசால் யாருமே மகிழ்ச்சியாக இல்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டோம். சர்க்கரை ஏற்றுமதி எளிமையாக இருக்கும் என்று நினைத்தோம். கரும்பு விலை உயரும் என்று எதிர்பார்த்தோம். பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. நாங்கள் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லை. மத்திய அரசு விவசாயிகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டது என்றார்.

அதேபோல் சமாஜ்வாடி கட்சி மீதும் ஜாட் சமூகத்துக்கு மகிழ்ச்சி இல்லை. கலவரத்தின் போது நடுநிலைமை வகிக்க தவறிவிட்டது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைந்தால் மட்டுமே சமாஜ்வாடி கட்சியின் பின்னால் செல்வோம் என்று பெரும்பாலான ஜாட் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாஜ.வுக்கு இதன் மூலம் பாடம் புகட்ட வேண்டும். ஜாட் சமூகத்தினர் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிப்போம். குறைந்தபட்சம் முஸ்லிம்களும் ஜாட்களும் இந்த தேர்தலில் ஓரு அணியில் நிற்போம் என்று ஹூடா காப்ஸை தேர்ந்த சவுத்ரி ஜீதீந்தர் சிங் தெரிவித்தார்.

முதல்வர் அகிலேஷ் யாதம் சில மேம்பாட்டு திட்டங்ளை செயல்படுத்தியுள்ளார். குறைந்தபட்சம் சாலை அமைத்து கொடுத்துள்ளார். பாஜ பிரித்தாலும் சூழ்ச்சியை மேற்கொள்கிறது. முதலில் உபி.யில் செய்தது. பின்னர் ஹரியானாவில் செய்தது என்றும் குற்றம்சாட்டினர். இதே போல் ஜாட் சமூகத்தை சேர்ந்த பல காப்ஸ் தலைவர்கள் பாஜவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். இதன் மூம் பாஜவக்கு உபி தேர்தலில் பின்னடைவு ஏற்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.