டோக்கியோ: ஜப்பான் மக்கள்தொகையில் பாதியளவு நபர்கள், தங்களின் திருமணத்திற்கு சரியான இணை கிடைக்காமல் தவிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அவர்கள், தங்களின் இக்கட்டான சூழலை மாற்றுவதற்கு, எதையுமே செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1899ம் ஆண்டு தொடங்கி ஒப்பிடுகையில், தற்போதுதான் ஜப்பானில் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. எனவே, அந்தச் சூழலை ஒட்டியே அந்நாட்டின் கேபினட் அலுவலகத்தால் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.

தங்களுக்கான இணையை சந்திப்பதில் உள்ள குறைவான வாய்ப்புகள், பொருளாதார நெருக்கடிகள், எதிர்பாலினத்துடன் வாழ்வதில் உள்ள பிரச்சினைகள் போன்றவை காரணங்களாக தெரியவந்துள்ளன.

20 முதல் 40 வயதிற்கு உட்பட்ட சுமார் 4000 ஆண் – பெண் கலந்துகொண்ட இந்த ஆன்லைன் சர்வேயில், 46.8% பேர், தங்களுக்கான பொருத்தமான இணையை கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்தனர்.