டில்லி:
உலகை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜப்பான் வலியுறுத்தி உள்ளது.
கடந்த 14ந்தேதி காஷ்மீர் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உடல்சிதறி பலியானார்கள். இந்த கொடூரமாக செயலை செய்தது தாங்கள் தான் என்று ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு மார்த்தட்டியது.
பயங்கரவாதிகளின் இந்த கோழைத்தனமாக தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருவதால், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்பட அனைத்து நாடுகளும் பாகிஸ்தானுக்கும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்த ஜப்பான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தரோ கனோ, பயங்கவாதத்தை பாகிஸ்தான் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு வலியுறுத்தி உள்ளார்.