டோக்கியோ: எந்த நிபந்தனையின்றி வட கொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்க தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா கூறி உள்ளார்.

ஐநாவின் 75வது பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா கூறியதாவது: ஜப்பான் பிரதமராக எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்திக்கத் தயாராக உள்ளேன்.
வடகொரியாவுடனான உறவை இயல்பாக்க ஜப்பான் தொடர்ந்து முயற்சிக்கும். சந்திப்பு இரு நாடுகளின் உறவுகளுக்கு மட்டுமல்லாமல் பிராந்திய அமைதிக்கும் முழுமையாக உதவும். அதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. சோதனைகளை ஆசியாவின் ஜப்பான் உச்சி மாநாட்டில் ஜப்பான் கடுமையாக விமர்சித்தது, குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel