ஜப்பானில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை இழக்க உள்ளது.
கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததை அடுத்து மொத்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் 0.4% சதவீதமாக சுருங்கிப்போனது.
ஜப்பானின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் சுருங்கியதை அடுத்து அந்நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையை அடைந்தது.
இதனால் ஜப்பானின் பொருளாதாரம் டாலர் மதிப்பில் உலகில் நான்காவது பெரிய நிலைக்கு சரிந்ததால், குடும்பங்களும், வணிகங்களும் மூன்றாவது காலாண்டில் செலவினங்களைக் குறைத்ததாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை காட்டுகிறது.
இந்த பொருளாதார மந்த நிலை காரணமாக உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விளங்கி வந்த ஜப்பான் தற்போது அந்த இடத்தை இழந்துள்ளது.
ஜெர்மனி இப்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.