டோக்கியோ
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் யாசுகிரோ நாகசோனேவுக்கு 100 வயதாகி உள்ளது.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் யாசுகிரோ நாகசோனே கந்த 1918ஆம் வருடம் மே மாதம் 27ஆம் தேதி பிறந்தார். இவர் பிறந்த வருடம்தான் முதலாம் உலகப்போரின் கடைசி ஆண்டு ஆகும். இவர் ஜப்பான் நாட்டு கடல்படையில் சேர்ந்து இரண்டாம் உலகப்போரின் போது லெஃப்டினெண்ட் கமாண்டராக பதவி வகித்தார்.
1950களில் அவர் ஜப்பானில் அணு ஆலைகள் அமைக்கும் பணியின் பின்புலமாக விளங்கினார். அவருடைய 50 வருடத்துக்கும் அதிகமான பாராளுமன்ற வாழ்க்கையில் அவர் ராணுவத்துக்கும் சர்வதேச வர்த்தக உறவுக்கும் மிகவும் தொண்டாற்றினார்.
நாகசோனே 1982 முதல் 1987 வரை ஜப்பான் நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். அவருடைய பதவிக் காலத்தில் ஜப்பான் நாட்டுடன் அனைத்து நாடுகளுக்குமான வர்த்தக உறவை மேம்படுத்தினார். இவருக்கு தற்போது 100 வயதான போதிலும் இன்னும் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். தனது மகளுடன் வசித்து வரும் இவர் செய்தித்தாள்களை படிப்பதில் இன்னமும் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார்.