சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பிறந்த தினம், இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24ம் தேதி, ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அறிவித்திருந்தார். அதன்படி இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் 9 அடி உயர முழு உருவச் சிலையை, கடந்த மாதம் 28ம் தேதி முதலமைச்சர் திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர், ஜெயலலிதாவின் பிறந்தாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், அன்றைய தினம் வெலிங்டன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, ஜெயலலிதாவின் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு, வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும், ஜெயலலிதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்கின்றனர்.
யார் இந்த ஜெயலலிதா?
1948ம் ஆண்டு 24 பிப்ரவரிந்தேதி மைசூரில பிறந்தவர் ஜெயலலிதா. இவரது இயற்பெயர் கோமலவள்ளி. இவரது பெற்றோர் பெயர் ஜெயராம் – வேதவள்ளி (சந்தியா) கோமலவள்ளி என்ற பெயரானது, ஒரு வடத்திற்கு பிறகுதான் ஜெயலலிதா என மாற்றப்பட்டது. தனது இரண்டு வயதிலேயே தந்தையை இழந்த தால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அதைத்தொடர்ந்து மைசூரில் இருந்து தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்று அவர்களுடன் வசித்தது. பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார்.
அப்போது ஜெயலலிதாவின் தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவருடைய குடும்பம் சென்னைக்கு வந்தது. அதனால், சென்னையிலுள்ள சர்ச் பார்க் பிரேசெண்டேஷன் கான்வென்ட்டில் தனது கல்வியைத் தொடர்ந்த இவர். 1964 இல் அவர் பத்தாம் வகுப்பை முடித்தார். பின்னர் தனது 15 வயதில் தாயின் வற்புறுத்தல் காரணமாகவே திரைப்படத் துறையில் கால் பதித்தார்.
முன்னதாக தனது 4 வயது முதலே கர்நாடக இசையையும், பரத நாட்டியத்தையும் கற்றுத் தேர்ந்தார். அதோடு மோகினி ஆட்டம், கதக்களி, மணிப்புரி போன்ற நடனங்களிலும் தேர்ந்தவராகத் திகழ்ந்தார். இதனால், அவருக்கு திரையுலகில் நுழைவது எளிதானது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தனது பரதநாட்டியத்தை அரங்கேற்றியுள்ளார். திரைப்படங்களில் ஏராளமான பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார்.
தமிழ்திரையுலகில் புகழ்பெற்ற கதாநாயகியாக வலம் வந்த ஜெயலலிதா, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, புகழ்பெற்ற முன்னாள் நடிகையாவார். தமிழ் திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து முத்திரை பதித்தவர். தனது நடிப்பு, நடனம், பாடல் திறமை போன்றவற்றால், தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.
நடிகர் எம்ஜிஆருடன் அதிக படங்களில் நடித்து, அவருடன் நெருக்கமானவர். அதன்மூலம் எம்ஜிஆரால் தமிழக அரசியல் களத்தில் இறக்கி விடப்பட்டவர். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் சிறந்த தலைவியாகவும், தமிழகத்தின் முதல் பெண் முதல்வராகவும், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசாகவும் விளங்கினார்.
ஜெயலலிதாவுக்கு ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் புலமைபெற்ற அவர், மலையாளத்தைப் புரிந்துகொள்ளும் திறனையும் பெற்றிருந்தார். தமிழகத்தின் இரும்பு பெண்மணியாகவும் திகழ்ந்த ஜெயலலிதா, பிரதமர் மோடியை எதிர்த்து, மோடியா, லேடியா என்று சூளுரைத்து தேர்தலில் வெற்றிபெற்றார். தமிழக அரசியலில் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட பெரும் தலைவர்களுள் ஒருவராக ஜெயலலிதா திகழ்ந்தார்.
இன்று அவரது பிறந்தநாள்.