பாட்னா:  பாட்னாவில் பாட்னாவில் ஜனதா தளம்-யுனைடெட் (ஜேடியு) கட்சி தலைவர் மர்ம நபர்களால்  சுட்டுக் கொலை  செய்யப்பட்டார். நேற்று நள்ளிரவு இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக பீகார் மாநில  காவல்துறை தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் தீவிர பிரசாரங்களை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். பீகார் மாநிலத்தில் ஏற்கனவே 4 தொகுதிகளில் தேர்தல் முடிவடைந்த நிலையில், 2வது கட்ட தேர்தல் சில தொகுதிகளில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மாநில தலைவர்  பாட்னாவில் ஜனதா தளம்-யுனைடெட் (ஜேடியு) தலைவர் சௌரப் குமார் நேற்று (புதன்கிழமை)  இரவு தனது நண்பர்களுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் பலத்த காயமடைந்த நிலையில், அவருடன் வந்தவர்கள், அவரை உடனே அருகே உள்ள கன்கர்பாக் உமா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கொண்டு  செல்லும் வழியிலேயேசௌரப் குமார்  உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கி சூடு நிகழ்ச்சியின்போரது, அவருடன் இருந்த  என்ஐடி-இல் பேராசிரியர் பணி  செய்து வந்த ஒருவர், மேலுலும், காரில் வந்த முன்முன் குமார் என்பவர் பலத்த காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து துப்பாக்கிச் சூடு நடத்திய அடையாளம் தெரியாத மர்ம நபர்களை தேடும் பணி ஈடுபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.