பஹல்காம் தாக்குதலில் பின்னணியில் உள்ளவர்களுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

விரைவில் துள்ளியமான மற்றும் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படுவதை, தாக்குதலுக்கு காரணமானவர்கள் பார்ப்பார்கள் என்று நாட்டு மக்களுக்கு அவர் உறுதியளித்துள்ளார்.

பயங்கரவாத‌த்திற்கு எதிராக பல்வேறு நாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்றி வருகின்றன, விரைவில் குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.