துரை

துரை நகரின் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க ஜல்லிக்கட்டு வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை நகரின் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்த மாடுகள் முட்டி மக்களில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.  இவ்வாறு மாடுகள் சுற்றித் திரிவதை தடுக்க அபராதம் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆயினும் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் எண்ணிக்கை குறையாமல் உள்ளது  மேலும் மக்கள் தொடர்ந்து இந்த மாடுகள் குறித்து மதுரை மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பி வருகின்றனர்.  எனவே இதை தடுக்க மதுரை மாநகாராட்சி ஒரு புதிய முறையை அமல்படுத்தியுள்ளது.

அதாவது தெருவில்சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க 12 ஜல்லிக்கட்டு விரர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.   இவர்கள் ஏற்கனவே வாடி வாசலில் இருந்து வெளியேறும் போதே காளையை அடக்கிப் பிடிப்பதில் பயிற்சி பெற்றவர்கல் ஆவார்கள், இதுவரை இந்த வீரர்கள் 90 மாடுகளை பிடித்துள்ளனர்.  மாநகராட்சி இவர்கள் பிடிக்கும் ஒவ்வொரு மாட்டுக்கும் ரூ. 2000 வழங்கி வருகிறது.

[youtube-feed feed=1]