சென்னை: மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களிலுள்ள 7 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து இருக்கிறது.

அதற்கான அறிவிப்பை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 1960ம் ஆண்டு விலங்குகள் கொடுமைப்படுத்துதல் தடுப்பு சட்ட 2வது பிரிவில், 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்மூலம் வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படுகிறது.

அதன்படி, கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா ராச்சாண்டார் திருமலை என்ற கிராமத்திலும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தலாம்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா சூரியூர், மருங்காபூரி தாலுகா ஆவாரங்காடு, மணப்பாறை தாலுகா பூதமெட்டுபட்டி, கருங்குளம் ஆகிய இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தலாம், அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.