சென்னை,
இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. ஆகவே மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், ‘ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் மூலம் தற்காலிக தீர்வு தேவையில்லை. நிரந்தர தீர்வு வேண்டும்.
காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும்.
அதுவரை போராட்டத்தை கைவிட முடியாது. எங்கள் போராட்டம் தொடரும்” என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அலங்காநல்லூர் போராட்டக்குழுவினரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel