லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த மலையாளத் திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’. ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்த திரைப்படம் இது.
தற்போது, சிறந்த அயல்நாட்டு / சர்வதேசத் திரைப்படம் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாகப் போட்டியிட ‘ஜல்லிக்கட்டு’ தேர்வாகியுள்ளது.
இது தொடர்பாக இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் :
“லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியின் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தைப் பார்த்தேன், மிகவும் ரசித்தேன். இந்தப் படம் இந்தியாவின் பரிந்துரையாக ஆஸ்கருக்குச் செல்வதில் மிக்க மகிழ்ச்சி. இந்த அழகான படத்தால் நாம் விருதை வெல்லும் நல்ல வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன்”. என பதிவிட்டுள்ளார்.
Watched and really loved #LijoJosePellissery @mrinvicible s film #Jallikattu very glad it has been selected as India's official entry for the #Oscars I think we have a good chance with this beauty of a movie.
— selvaraghavan (@selvaraghavan) November 25, 2020