டில்லி,

மிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற ஏதுவாக அவசர இயற்ற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு மார்க்கண்டேய கட்ஜு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக போட்டி நடைபெறவில்லை. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி, மத்திய அரசு உடனடியாக காளைகளை வதைபடும் விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று உச்சநீதி மன்றத்தில் சாதகமான தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், உடனே தீர்ப்பு வழங்க முடியாது என்று நீதி மன்றமும் கைவிரித்து விட்டது.

இந்நிலையில் முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியும், முன்னாள் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளதாவது,

பொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த சூழலில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டுமென ஜனாதி பதிக்கு  மார்க்கண்டேய கட்ஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே ஜல்லிக்கட்டு தொடர்பாக மாற்று யோசனையை தனது பேஸ்புக் வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதில்,   ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது குறித்து தமிழர்கள் கவலைப்பட தேவை யில்லை. பிரச்சினை வரும்போது காஷ்மீர் பண்டிட்கள் போல் செயல்படலாம். தமிழக அரசே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.