சென்னை:

மிழர்களின் வீரமிக்க போட்டியான ஜல்லிக்கட்டுப்போட்டி, பொங்கலை முன்னிட்டு தென்மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களின் வயது 18ல் இருந்து 21 ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழர்களின் வீர வீளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பொங்கலையொட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கலந்துகொண்டு மாட்டை அடக்கும் வீரர்களுக்கான வயது,  18 முதல் 45 வயது வரை இருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு முதல் குறைந்தபட்ச வயது 18ல் இருந்து 21ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மாடு பிடி போட்டியில் இளம் வயதுடையவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டு இருப்பதாக மதுரை மாவட்ட  ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.

அதேபோல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ள 10-ஆம் தேதி நடைபெறும் உடல்தகுதி பரிசோதனை முகாமில் கலந்துகொள்ளவும்,  பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள வரும் 11-ம் தேதி நடைபெறும் பரிசோதனை முகாமில் கலந்துகொள்ளும்படியும் மாடு பிடி வீரர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.