புதுடெல்லி:
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக பீட்டா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ”2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு, கம்பாலா போட்டிகளை நேரில் பார்த்து ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் பரீசிலனை செய்யவில்லை. இந்த தீர்ப்பில் மிகப்பெரிய சட்ட தவறு நடந்துள்ளது. நீதியும் தவறியுள்ளது” என கூறப்பட்டுள்ளது. எனவே ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தையும், கம்பாலா போட்டிகளை அனுமதிக்கும் கர்நாடகா அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அந்த மனுவில் இடம் பெற்றுள்ளது. இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.