ஜக்கியின் “நதிகளைமீட்போம்” பிரச்சாரபயணம்குறித்து…
ரவுண்ட்ஸ்பாய்கேள்வி..ராமண்ணாபதில்…
ரவுண்ட்ஸ்பாய்: அரசியலில் “தர்மயுத்தம்..துரோகம்” என்றவார்த்தை களாதாராளமாக புழங்குகின்றனவே..
ராமண்ணா :ஒருதிரைப்படநகைச்சுவைகாட்சி…
கடையில் இருந்து எடை க்கற்களைத்திருடி, பழைய இரும்புக்கடையில் விற்று விடு வார்வடிவேலு. உரிமயாளர்பின் தொடர்ந்துவந்து, “ஆயிரம் ரூபாய் கல்லுடா..கொடுத்திருங்கடா” என்று கெஞ்சுவார்.
வடிவேலுவோ.. “ஆயிரம் ரூபாயா..அந்த பழைய இரும்பு க்கடைக்காரன் வெறு ம்நூறு ரூபாய்தானே கொடுத்தான்..ஏமாத்திட்டானே…” என்பார்.
கடை உரிமையாளர், “அடேய்..ஏமாந்தது நான்தான்டா..”என் பார்பரிதாபமாக.
அரசியலிலும் அப்படித்தான். திருடியவர்கள், “தர்மயுத்தம், துரோகம்” என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். திருட்டு கொடுத்தவர் கள்பரிதாபமாக வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்கிறார்கள்.
ரவுண்ட்ஸ்பாய்: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியில் கமல் சேர்ந்துவிடுவாரோ
ராமண்ணா: சேருவதும், தனித்து இயங்குவதும் அவரது விருப்பம். ஒருவேளை ஆம் ஆத்மியில் சேர்வதாக இருந்தால்… ஏற்கென வேஅக்கட்சியில் சேர்ந்து பிரிந்தபோதுசுப. உதயகுமார் விடுத்த அறிக்கையை கமல் ஒரு முறை படிப்பது நல்லது.
ரவுண்ட்ஸ்பாய்: சினிமாவில் இருந்துதான் அரசியல் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டுமா..இது இழிவானநிலை அல்லவா
ராமண்ணா: சினிமா உட்பட எந்தத்துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம். தவிர, சினிமாவில் இருப்பவர் அரசியலுக்கு வருவது இழிவுஎன்றால் அதற்குக்காரணம், ஏற்கெனவே அரசியலில் இருப்பவர்கள்தான். அதாதவது, “இவர்கள் என்ன செய்து கிழித்துவிட்டார்கள்” என்ற எண்ணம் சினிமாக்காரர்களுக்கு வருவதால்தான் தைரியமாக சினிமாக்காரர்கள் வருகிறார்கள்..மக்களும் வரவேற்கிறார்கள்?
ரவுண்ட்ஸ்பாய்: ஈசாமைய அதிபர் ஜக்கி, நதிகளை மீட்க மிஸ்டுகால் கேட்பதோடு, காரில் பயணமும் கிளம்பிவிட்டாரே..
ராமண்ணா: மிஸ்டுகால் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா என்பது ஒருபக்கம். தவிர அவர்ந திகள் உட்பட இயற்கையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் பிரச்சாரபயணம் மேற்கொண்டி ருக்கும்கார்… விடும்புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாம்.
ஆற்றின் ஓரங்களில் இரண்டு பக்கமும் தலா ஒரு கி.மீதூரத்திற்கு மரங்கள் நடப்படும் என்கிறார்கள். இதற்கு பெருபெருநிறு வனங்கள் உதவுமாம். அதாவது பெருநிற வனங்கள் உள்ளே புகபோகின்றன.
குறிப்பாக, நீரை மாசுபடுத்து வதாக புகாருக்கு ஆளாகிஇருக்கும் ஓஎன்ஜிசி, அதானி போன்ற நிறுவனங்களும் இதில் ஜக்கிக்கு உதவி செய்ய வவந்திருக்கின்றன.
நதிகளை அழிக்கும் மணல் கொள்ளை, கோகோ கோலா – பெப்சி போன்ற நிறுவனங்களின் நீர்க்கொள்ளை போன்ற விசயங்கள் பற்றி மூச்சுவிடமறுக்கிறது ஜக்கியின் பிரச்சாரம்.
தவிர மணல் கொள்ளை புகாருக்கு ஆளான அதிகாரப்பிர முகர்களுடனேயே இதற்கான மேடைகளில் தோன்றுகிறார் ஜக்கி.
ஆகவே பல வித கேள்விகளுக்கு ம்சந்தேகங்களுக்கும் ஆளாகியிருக்கிறது ஜக்கியின் நதிகளை மீட்போம் பிரச்சார பயணம்.