டில்லி:

மீபத்தில் காஷ்மீரில் புல்வாமா பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி ஏராளமான வீரர்களை கொன்று குவித்த  ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் மீண்டும் தாக்கதல் நடத்தப்படும் என மிரட்டி உள்ளது.

இதன் காரணமாக டில்லி உள்பட பல மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படத்தப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் இலங்கையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியாவிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மும்முரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லி உள்பட 5 மாநிலங்களில் தாக்குதல் நடத்த உள்ளதாக ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் அமைப்பில் இருந்து கடிதம் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச காவல்துறை டிஜிபி  உள்பட சிலர் மீதும், முக்கிய  வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்றும், இந்த தாக்குதல்கள், மே 6 முதல் 13 தேதிக்குள் தாக்குதல் நடத்தப்படும் எனவும் மிரட்டல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, காவல்துறையினர் உள்பட அனைத்து புலனாய்வு அமைப்புகளும் உஷார் படுத்தப்பட்டு உள்ளது.