சென்னை:

தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அவருக்கு எதிராக உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

நீதிபதிகள் சிலர் மீது ஊழல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் இவர் மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி அவருக்கு போலீஸ் உதவியுடன் மனநல பரிசோதனை நடத்திட உத்தரவிட்டது.

பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ணன் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தான் மன நலம் சரியில்லை என்று கூறி அதிரடித்தார்.

இந்நிலையில் இன்று நீதிபதி கர்ணன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில் கொல்கத்தா நீதிபதிகள் 7 பேர் மற்றும் தனக்கு எதிராக உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி ஆகிய 8 நீதிபதிகளுக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், அவர்களுக்கு மனநல பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டார்.