புதுடில்லி:
ஞ்சம் கொடுப்பவர்களுக்கும் சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதா ராஜ்யசபா தேர்வுகுழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த சட்ட திருத்தம் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக  சமுக ஆர்வலர்கள் போர்கொடி தூக்கி உள்ளனர்.
bribe
லஞ்சம் கொடுப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் மத்திய அரசின்  இந்த சட்ட திருத்தத்தால், அரசு, ஊழல்வாதிகளை காப்பாற்றுகிறது.  லஞ்சம் தர மறுப்பவர்களுக்கு எதிராக இது தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது’ என, சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்து உள்ளனர்.
இந்த லஞ்சதடுப்பு சட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களையும் கொண்டு வருவது உட்பட, பல்வேறு திருத்தங்க ளுக்கான மசோதா, ராஜ்யசபா தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.  குழு சமீபத்தில் அளித்துள்ள அறிக்கையில், ‘லஞ்சம் கொடுப்பவருக்கும், அதிகபட்சம், ஏழு ஆண்டு சிறை தண்டனை அளிக்க வேண்டும்’ என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
bribe1
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது,  அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்து கொள்பவர்களுக்கும், லஞ்சம் தர மறுப்பவர்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
இந்தப் பரிந்துரையால், எந்த அதிகாரி மீதாவது லஞ்சம் வாங்கியதாக வழக்கு தொடர வேண்டு மானால், அவருக்கு யார் லஞ்சம் கொடுத்தனரோ, அவர்கள் மீதும் வழக்கு தொடர வேண்டும்; தெரிந்தே லஞ்சம் கொடுக்கப்பட்டிருந்தால், அதை நிரூபிப்பது மிகவும் கடினம் என்றார்.
மேலும்,  லஞ்சம் கொடுக்க மறுப்பவர்களை  பழிவாங்க, ‘லஞ்சம் கொடுக்க முயன்றார்’ என, அதிகாரிகள் பொய் புகார் கொடுக்கும் சூழல் உருவாகும் என்றார்.
இந்த சட்டத்தின்படி, லஞ்சம் கொடுத்தால், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.   லஞ்சம் வாங்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை. அதனால், அரசு ஊழியர்கள் எளிதில் தப்பிவிடுவர் என்றும் அவர் கூறினார்.