சிம்லா:

மாச்சல பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய்ராம் தாகூர் வரும் 27ந்தேதி பதவி ஏற்கிறார்.

நடந்து முடிந்த இமாச்சல் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றது.

மெத்தம் 68 தொகுதிகள் கொண்ட இமாச்சல் சட்டசபை தேர்தலில் 44 தொகுதிகளை பாஜக-வும், 21 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும் பெற்றனர்.

அதைத்தொடர்ந்து பாஜக முதல்வரை தேர்ந்தெடுக்க, அமைச்சர் நிர்மலா சீதாராமன், நரேந்திர தோமர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் முன்னிலையில், இமாச்சல மாநில பாஜக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக, பாஜக மூத்த தலைவர் ஜெய்ராம் தாகூர் தேர்வு செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து கவர்னர் ஆசார்யா தேவ்ராத்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து வரும் 27ந்தேதி அவர் முதல்வராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜெய்ராம் தாகூர் ஏற்கனவே இமாச்சல் முதல்வராக இருந்தவர் என்பதும், தற்போது  ஐந்தாவது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.