
எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் கேப்மாரி திரைப்படத்தின் டைட்டில் சி.எம் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறது.
ஜெய்க்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் பாடலொன்று சென்னையிலுள்ள எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்றுள்ளது. என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா எனத் தொடங்கும் இப்பாடலுக்கு ஜெய்யுடன் இணைந்து 50 நடனக் கலைஞர்கள் நடனமாடியுள்ளனர்.
சித்தார்த் விபின் இப்பாடலுக்கு இசையமைக்க, ஷெரிஃப் நடனம் அமைத்துள்ளார். ஹரிச்சரண் இப்பாடலை பாடியுள்ளார்.
சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார் சீனிவாசன், சித்தார்த் விபின் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரிக்கிறார்.
[youtube-feed feed=1]