
‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.
அதை தொடர்ந்து தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் . இது சூர்யா நடிப்பில் உருவாகும் 39-வது படமாகும். இந்தப் படம் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இருளர் பழங்குடியினர் பிரச்சனையை பேசும் திரைப்படம் இது. அவர்களுக்காக போராடும் வழக்கறிஞராக சூர்யா வருகிறார்.
சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இந்தப் படத்துக்கு ‘ஜெய் பீம்’ எனத் தலைப்பிட்டுள்ளனர். இதில் சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இந்த நிலையில், ‘ஜெய் பீம்’ படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் வெளியாகிறது.
Proud to bring this story of courage and faith in pursuit of Justice!!#JaiBhimOnPrime arrives Nov 2, on @PrimeVideoIN@prakashraaj #Jyotika @tjgnan @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit @rajisha_vijayan #Manikandan @jose_lijomol@rajsekarpandian @2D_ENTPVTLTD pic.twitter.com/58rQIFP38Y
— Suriya Sivakumar (@Suriya_offl) October 1, 2021