டெல்லி: குஜராத்  பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த  பயிற்சி  போர்  விமானம்  திடீரென வெடித்துச் சிதறியது. இதில் விமானி பலியானர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இகுறித்து  இந்திய விமான படை விளக்கம் அளித்து உள்ளார்.

போர் பயிற்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறே விபத்துக்கு காரணம் என  இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்திய விமான படையைச் சேர்ந்த ஜாகுவார் போர் விமானத்தில்  இரண்டு வீரர்கள் குஜராத் பகுதியில் பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.  பயிற்சியின்போது, குஜராத் ஜாம்நகர் அருகே திடீரென  கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென வெடித்துச் சிதறி வயல்வெளியில் விழுந்தது.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயங்களுடன் கிடந்த ஒரு விமானியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாயமான மற்றொரு விமானியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.  இந்த நிலையில், விமானப் படையின் போர் பயிற்சி விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறிய விபத்தில் மாயமான விமானி பலியாகி உள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இந்திய விமானப்படை தனது  எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,    போர் பயிற்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறே விபத்துக்கு காரணம். விமானிகளின் சாதுர்யத்தால் விமான தளம், உள்ளூர் மக்களுக்கு தீங்கு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியான விமானியின் குடும்பத்தினருடன் உடன் நிற்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.