சென்னை,
பரபரப்புக்கு பெயர்போன ஈஷா யோக மைய நிறுவனர், ஜக்கி வாசுதேவ், நதிகளை இணைப்போம் என்று கடந்த ஆண்டு நாடு முழுவதும் உயர்ரக காரில் வலம்வந்து தன்மீதான பார்வையை விவசாயிகள் பக்கம் திரும்ப வைத்தார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட ஜக்கி பல்வேறு தரப்பினரின் கேள்விக்கு பதில் அளித்தார்.
ஆண்டாள் குறித்து தமிழ்நாடு முழுவதும் அது பரவலாக விமர்சனம் செய்யப்பட்டு வருவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், நான் ஒரு பெரிய ஸ்காலர் இல்லை.. அதனாலே நான் ஒன்னும் பேச முடியலே என்று கூறி சிரித்தார்.
அவர் என்ன சொன்னார் என்று நான் படிச்சதில்லே… நான் எப்படி கமென்ட் பன்றது… என்று திருப்பி கேள்வி எழுப்பிய அவர்…
இது என்னன்னா நமது நாட்டுல இப்படி ஆயிடுச்சு… படிக்காதவங்க கூட புத்தகம் மேலே கமென்ட பன்றாங்க… சினிமா பாங்காதவங்க கூட சினிமா மேல கமென்ட் பன்றாங்க.. அந்த மாதிரி நான் இல்லை என்று கையெடுத்து கும்பிட்டார்.
சினிமா பார்த்திருந்தாலோ, படித்திருந்தாலோ அது குறித்து ஏதோ சொல்லியிருப்பேன்… நான் படிக்கவுமில்ல பாக்கவுமில்ல நான் எப்படி கமென்ட் பன்றது..
ஆன்மிகவாதியான ஜீயர் சோடா பாட்டில் வீசத்தெரியும் என்று கூறியது குறித்த கேள்விக்கு,
நான் அந்த மாதிரி ஆன்மிகத்தில் இல்லை என்று கூறி சிரித்தார். தான் சோடாவே குடிச்சதில்லை.. … சோடா பாட்டில் எங்க வீசப்போகிறேன் என்று கூறி சிரித்தார்.
அதைத்தொடர்ந்து அவரிடம் அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,
நான் அரசியல் குறித்து எப்போதும் பேசுவதில்லை என்றும், அரசாங்கம் குறித்து மட்டுமே பேசுகிறேன் என்றார். நாம தேர்வு செய்த அரசாங்கம்தானே… அதனால்தான் அவருடன் பேசிக்கொள்கிறேன்.
அரசியல் பார்ட்டிகூட நான் இதுவரை பேசவில்லை… பேசவும் மாட்டேன்.. என்றார்… அரசாங்கம்கூட பேசலன்ன எப்படி வேலை பாக்க முடியும்… என்றார்.
தொடர்ந்து, ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்த கேள்விக்கு, அது அவருடைய இன்டிவிஜுவல் இதுதானே… ஆன்மிகத்தில் இருந்து அரசியலுக்கு வரக்கூடாதுன்னு ஒன்ணும் இல்லை.. ஆனா நான் வரமாட்டேன் என்று கூறி கடகடவென சிரித்தார்.
மேலும் விவசாயம் குறித்து அவர் கூறியதாவது,
நிறைய விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர், வங்கிகள் நிறைய தொல்லைகள் கொடுக்கின்றன… இந்த விஷயத்தில் மாநில அரசு கண்டுகொள்ளவில்லை.. உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஜக்கி, இது நாட்டிலே உள்ள அனைவரும் தலையை கீழே போட வேண்டிய அசிங்கமான ஒரு நிலை என்றும், நமக்கு உணவு கொடுப்பவருக்கு உணவு இல்லாத நிலையும், அவரது குழந்தைக்கு உணவு இல்லாமலும் தற்கொலை பண்ணிக்கிறது சாமானியமான விஷயமில்லை… இது நியூஸ் அல்ல… அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றார்.
மேலும், உங்களால் பயிர் வளர்க்க முடியாது. விவசாயம் தெரிந்த ஆள் இல்லாமல் ஒரு பயிரையும் நம்மால் தயாரிக்க முடியாது. அவ்வளவு கஷ்டம் விவசாயத்தில் உள்ளது என்ற அவர்,
இந்த ஒரு அறிவு, ஞானம் நம்ம நாட்டுக்கு உணவா இருக்குது.. 125 கோடி மக்கள் இருக்காங்க… உணவு தயாரிக்கும் சக்தி நமக்கு போயிடுச்சின்னா… நாடே நாசமாயிடும்… ஆனா நாம தற்போது அந்த மாதிரி நிலையிலே இருக்கிறோம்..
இதற்கு முக்கிய காரணம் என்னன்னா.. நமது வாழ்க்கையில், கட்டாய கல்வி கொண்டு வந்தோம்… ஆனால், அந்த கல்வியில் விவசாயம் குறித்த ஒன்றும் கிடையாது… பிசிக்ஸ், கெமிஸ்டிரி, அல்ஜிப்ரா என என்னென்னமோ சொல்லிக் கொடுக்கிறாங்க.. ஆனா நம்ம விசாயத்தை பற்றி ஒரு பேச்சுக்கூ கிராமத்து ஸ்கூல்ல சொல்லல…..
17வயதுள்ள ஒருவன் தோட்டத்துக்கு போவதில்லை… அவர் அவரது தந்தையுடனோ, தாயுடனோ போய்வேலை செய்யணும், இது சைல்டு லேபர் கிடையாது… நாம ஏதோ வெளிநாட்டுல இருக்கிற சட்டத்தை எடுத்துக்கொண்டு அப்படியே போட்டோம்…
ஆனால்…. இப்போ பார்தால் அடுத்த தலைமுறைக்கு விவசாயம் எப்படி பண்ணுவது என்பதே தெரியவில்லை என்றார். விவசாயம் தேவையான உடல் சக்தியும் இல்லை… அறிவும் இல்லை. இந்த நிலை நீடித்தால் நாட்டில் எப்படி உணவு தயாரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
நமது நாட்டு கல்வி திட்டத்தில் விவசாயத்தை கொண்டு வர வேண்டும் என்று நான் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகளிடமும், அமைச்சரிடமும் பேசிக்கொண்டிருக்கிறோம்…. இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் இல்லை… என்னதுக்கு என்று தெரியவில்லை என்று கூறினார்.
அவர்கள் கல்வியில் இதை சேர்ப்பது குறித்து ஏதாவது கொஞ்சம் பேசினாங்கன்னா… ஊரிலே உள்ள ஆக்டிவிஸ்டு எல்லாம் எழுந்து நின்னுருவாங்க … அப்பதானே நீங்க அவங்க அலுவலகத்திலே கிளார்க் வேலை செய்ய முடியும் … அதுஅவர்கள் ஆசை என்றார்.
தற்போது நமது நாட்டில் கைத்தறி எல்லாம் அழிந்து போய்விட்டது என்றும், காரணம் கேட்டால் குழந்தை ஸ்கூலுக்கு போகிறான் என்றும், கைத்தொழிளை கத்துக்கமாட்டான் என்றும் கூறுகிறார்கள்.
அதுபோல இப்போ விவசாயமும் அழித்து வருகிறது. அடுத்த தலைமுறையில் விவசாயம் இல்லாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.