கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில் ஜக்கிவாசுதேவ் நடத்திவரும் ஈஷா யோகா மையம் பற்றி பல்வேறு புகார்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஜக்கிவாசுதவ் மற்றும் ஈஷா மையம் பற்றி பிரபலங்கள் புகழ்ந்து பேசியவற்றை, சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
a
நடிகை சுஹாசினி, அப்படி பேசிய பேச்சும் இப்போது வலைதளங்களில் பரவிவருகிறது.
“ஈஷா சத்குரு” என்கிற பிளாஸ்பாட்டில், கடந்த (2015) டிசம்பர் 30ம் தேதி வெளியான நடிகை சுஹாசினியின் பேச்சு இது.
“கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற இன்னர் இஞ்சினியரிங் வகுப்பில் பங்கேற்ற பிரபல திரைப்பட நடிகை, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் திருமதி.சுஹாசினி மணிரத்னம், தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்” என்ற முன்னுரைக்குப் பிறகு சுஹாசினி பேச ஆரம்பிக்கிறார்:
“ நான் சத்குருவை (ஜக்கிவாசுதேவ்)  முன்பே சென்னையில் நான்கைந்து முறை சந்தித்திருக்கிறேன். அவரது பேச்சும், அறிவுக்கூர்மையும், புத்திசாலித்தனமும்… அத்தோடு அவரிடம் எப்போதும் ததும்பும் புத்துணர்ச்சியும், சந்தோஷமும் என்னை வெகுவாய் கவர்ந்திருக்கிறது.
இந்த வகுப்பில் பங்கேற்குமாறு ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பலமுறை என்னை அழைத்தபோதும், ஏனோ நான் பங்கேற்கவில்லை.  ஆனால், இப்போது என் நண்பர்கள் 39 பேர் இந்த ‘இன்னர் இஞ்சினியரிங்’ வகுப்பில் கலந்துகொள்ள முடிவெடுத்தபோது, நானும் அவர்களோடு வந்துவிட்டேன். வாழ்வில் எத்தனை எத்தனை அழகான, சிறப்பான, அற்புதமான அம்சங்கள் இருக்கிறது என்பதை நமக்கு நினைவுறுத்த இவரைப் போன்ற ஒருவர்தான் தேவைப்படுகிறார்!
இந்த வகுப்பிற்கு நாங்கள் வந்தபோது, சத்குரு இங்கில்லாமல் போனது என் நண்பர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருந்தது. ஆனால், எனக்கு அப்படி இல்லை! அவர் பேச்சை நான் கேட்டிருக்கிறேன்…  அவரது சக்தியையும் உணர்ந்திருக்கிறேன். அவர் வடிவமைத்து, அவரின் குறிப்புகளோடு நடக்கும் எதுவும் அற்புதமாக இருக்கும் என்பதை நான் முழுமையாக நம்பினேன். இந்த வகுப்பும் அவ்வாறே இருந்தது!
இங்கு எனக்குக் கிடைத்த அனுபவம் இதுவரை நான் உணர்ந்திடாத ஒன்று. ஆங்கிலத்தில், ‘வேற்றுலக அனுபவம்’ என்பார்கள்… அதாவது, இந்த உலகத்து அனுபவங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒன்று என்று பொருள். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், அந்தச் சொல்லிற்கான அர்த்தத்தை நான் இங்குதான் உணர்ந்தேன்.

ஜக்கி வாசுேதேவ்
ஜக்கி வாசுேதேவ்

இந்த வகுப்பின் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் இருக்கும் நுணுக்கம், இங்கிருக்கும் மக்கள், இங்கிருக்கும் ஒவ்வொன்றிலும் மிளிரும் அழகுநயம், இந்த இயற்கையான சூழல் எல்லாமே பிரமிக்க வைக்கின்றன. இது கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. எதைப்பற்றி நாம் சிந்தித்தாலும், அதை வட்டம் என்றோ, சதுரம் என்றோ வகை சேர்த்துவிடுவோம்… ஆனால் இதை ‘இதுதான் வடிவம்’ என்று நிர்ணயிக்க முடியாதவாறு இருக்கிறது. இதுவரை நான் அறிந்திராத ஒரு பரிமாணம் இது.
இந்த வகுப்பில் கற்றவற்றைத் துணையாய்க் கொண்டு எங்கள் வேலையில் ஈடுபடுவது, இன்னும் நல்ல பலன்களைத் தரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
ஒரு ‘போட்டோகிராபர்’ ஆக எனக்கு சத்குருவிடம் பிடித்தது, ‘அவர் மிகவும் போட்டோஜெனிக்‘! எந்தக் கோணத்தில் இருந்து எடுத்தாலும் அவரது போட்டோக்கள் அருமையாக இருக்கின்றன. அதோடு அவரது ‘பாடி லேங்குவேஜ்’, அவர் பேசும் விதம் என எல்லாமே அழகு.
படங்களில் ‘இப்படி இருந்தால்… இப்படி செய்தால்’ என்று ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தித்து, ‘டைரக்டோரியல் டச்’ கொடுக்க நினைப்போம்… ஆனால் சத்குருவிடம் குறை என்று சொல்ல எனக்கு எதுவுமே இல்லை. அவரிடம் எல்லாமே சரியாக இருப்பதாகவே எனக்குத் தோன்றும்.
ஒரு மனிதராக அவரைப் பார்த்தாலோ… அவர் உயிரோட்டத்தின் ஒட்டுமொத்த உருவம். இந்தளவிற்கு ஒரு ‘பாஸிடிவ்’வான கண்ணோட்டத்தோடு யாரும் வாழ்வை அணுகி நான் இதுவரை பார்த்ததில்லை.
நடிகை சுஹாசினி
நடிகை சுஹாசினி

வாழ்வில் எத்தனை எத்தனை அழகான, சிறப்பான, அற்புதமான அம்சங்கள் இருக்கிறது என்பதை நமக்கு நினைவுறுத்த இவரைப் போன்ற ஒருவர்தான் தேவைப்படுகிறார்! பாஸிடிவ்வான எண்ணங்கள், சந்தோஷம், ஆனந்தம் என எல்லாவற்றின் முழு உருவமாய் இவர் இருக்கிறார்.
அது மட்டுமல்ல… இதையெல்லாம் தாண்டி அவரின் புத்திசாலித்தனத்தனத்தையும், அறிவுக்கூர்மையயும் என்னவென்று சொல்வது!
ஈஷா யோகா வகுப்பு… ஒரு முழுமையான அமைப்பு. மிக எளிமையாக, அருமையாக அனைவரையும் சென்றடையக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சித்தாந்தங்கள் இல்லாமல், நம்பமுடியாத வர்ணஜாலங்கள் இல்லாமல், மக்களின் வாழ்வை ஒட்டிய, மனிதத் தன்மை நிறைந்த வார்ப்பாக இந்த வகுப்பு இருக்கிறது. மிக எளிமையான விஷயங்கள்தான்… ஆனால் அதை உணர்வதே வேற்றுலக அனுபவம்போல் ஒரு பரவசத்தில் நம்மை ஆழ்த்துகிறது.
என் நட்பு வட்டாரத்தில் இருக்கும் பலருக்கும் இந்த வகுப்பை நான் நிச்சயம் பரிந்துரை செய்வேன்!  இவ்வாறு பேசியிருக்கிறார் நடிகை சுஹாசினி.” இப்படி பேசியிருக்கிறார் நடிகை சுஹாசினி.