ராஜ்யசபாவில் கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகள் சிக்கியதாக துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் பணம் இருந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
“நேற்று சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபையில் வழக்கமான பாதுகாப்பு சோதனையின் போது தெலுங்கானா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அபிஷேக் மனு சிங்விக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை எண் 222-ல் கரன்சி நோட்டுகள் இருந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்” என்று ஜக்தீப் தன்கர் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.