‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சலார்’. ‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் நாயகனாக பிரபாஸ் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.
‘சலார்’ படத்தின் ராஜமன்னார் கதாபாத்திரம் இன்று (ஆகஸ்ட் 23) அறிமுகம் செய்யப்படும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி, பிரபாஸுக்கு வில்லனாக ராஜமன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜெகபதி பாபு.
This is the best of my worst look ever. #Salaar
Thanks to @prashanth_neel, #Prabhas, @VKiragandur, @hombalefilms, and the entire crew.
Really excited to give my best with the help of #PrashanthNeel, I fell in love with myself – ur 𝐑𝐚𝐣𝐚𝐦𝐚𝐧𝐚𝐚𝐫 forever. pic.twitter.com/yuEdtz35bE— Jaggu Bhai (@IamJagguBhai) August 23, 2021