கொரோனா பேரிடரால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பல படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகின்றன.
அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம், 17 மொழிகளில், 190 நாடுகளில் வெளியாவதாக தற்போது கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் வரும் 18-ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் நிலையில், இந்தத் தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளுடன் ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன், போலிஷ், போர்ச்சுகீஸ், ப்ரேசிலியன், ஸ்பானிஷ் – ஸ்கேட்டிலியன், ஸ்பானிஷ் – நியூட்ரல், தாய், இந்தோனேஷியன் மற்றும் வியட்நாமிஸ் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இந்த மொழிகளில் படத்தை ‘டப்’ செய்துள்ளனரா இல்லை, சப் டைட்டில் மட்டும் இந்த மொழிகளில் வருமா என்பதை தெரிவிக்கவில்லை.
190 Countries 17 Languages 1 #Suruli #JagameThandhiramOnNetflix from June 18… pic.twitter.com/AzSuPttweh
— karthik subbaraj (@karthiksubbaraj) June 15, 2021