சென்னை: போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணத்தில், 21 கோடி ரூபாயை, ஜாபர் சாதிக் சில முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் முன்னாள்  துணை அமைப்பாளருமான  ஜாபர் சாதிக் போதை போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 11ந்தேதி போதை பொருள் தடுப்பு காவல்துறையினரால் ஜெய்ப்பூரில் வைத்து  அதிரடியாக கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவர் சர்வசேத அளவில் போதைப் பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரது கூட்டாளிகள் டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில்,  , திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருளான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில், அவர்  போதை பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை,  சில நபர்களுக்கும்  அரசியல் கட்சிகளுக்கும் வழங்கியிருப்பதாக தகவல் உள்ளது. மேலும்,  “போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணத்தில் சென்னையில் ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. (வடநாட்டு ஊடகங்களில், *ஜாஃபர் சாதிக் கொடுத்த  வாக்குமூலத்தில்,   திமுக அமைச்சருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் தான் பணம் கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியாகி உள்ளது.)

இந்த நிலையில்,  அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது. அதற்கு  அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவரிடம் அமலாக்கத்துறை விசாரிணைநடத்தி வருகிறது. இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கூறிய  அமலாக்கத்துறை அதிகாரிகள் , போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு ஆகியோரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம்.

ஜாபர் மனைவி  அமீனா பானுவின் வங்கி கணக்கில் இருந்து, சினிமா பட இயக்குனர் அமீருக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் அனுப்பப்பட்டுள்ளது. இது, போதை பொருள் கடத்தலில் சம்பாதித்த பணம் என்பதை, ஜாபர் சாதிக் உறுதி செய்துள்ளார்.

 அவரது மனைவியான அமீனா பானுவை வரவழைத்தும்  இந்த பணம் விசாரித்துள்ளோம். ஆனால், அவர்  தனக்கு எதுவும் தெரியாது என்று  கூறுகிறார். ஆனால், வெளிநாடுகளில் இருந்து, அமீனா பானுவின் வங்கி கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அதேபோல, ஜாபர் சாதிக்கின் இரண்டாவது தம்பி மைதீன் வங்கி கணக்கில் பதிவாகியுள்ள பண வரவுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஜாபர் சாதிக் வாயிலாக, சில முக்கிய புள்ளிகளுக்கு, 21 கோடி ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. விசாரணையை பாதிக்கும் என்பதால், அவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.

போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணம், பேரீச்சம் பழம் இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டது போல கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில், முக்கிய நபராக மார்க்க நெறியாளர் என்று, கூறப்படும் அப்துல் பாசித் உள்ளார்; அவரையும் விசாரிக்க உள்ளோம்.

ஜாபர் சாதிக் வலதுகரமாக, சென்னை ஆவடியைச் சேர்ந்த ஜோசப், மற்றும் ஆயிஷா, ஆகியோர் செயல்பட்டுள்ளனர். ஜாபர் சாதிக், வெளிநாடுகளில் உள்ள சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொள்ளும் பொறுப்பை ஜோசப்பிடம் ஒப்படைத்துள்ளார். அதை வாக்குமூலமாகவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தொடர்புகளை ஜோசப் மற்றும் அவரது மனைவி ஆயிஷா ஆகியோரின் வங்கி கணக்கு விபரங்கள் உறுதி செய்கின்றன.

ஜாபர் சாதிக், பல கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுக்கிறார் என்று கூறிய அதிகாரிகள், இந்த கடத்தல் தொடர்பாக  அவரது தம்பி மைதீனுக்கு, ‘சம்மன்’ அனுப்பியும் அவர் இதுவரை ஆஜராகவில்லை. அவர்  தலைமறைவாக உள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

“ஜாபர் சாதிக்கின் முழுப் பெயர் ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான். இவர் டெல்லி, தமிழ்நாடு போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வந்துள்ளார். “சில  மாதங்களுக்கு  முன்பு டெல்லியின் பசாய் தாராபூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், 50 கிலோ அளவில் போதைப் பொருள் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருள் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து க டெல்லி காவல் துறையின் உதவியுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்களின் தலைவர் ஜாபர் சாதிக் என்று தெரிவித்தனர்.

“சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஜாபர் சாதிக், போதைப் பொருள் கடத்தல் மூலம் வந்த பணத்தில் ‘மங்கை’ என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும்,  “போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படத் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்ட்டேட், ஹோட்டல் போன்ற பல்வேறு தொழில்கள் முதலீடு செய்துள்ளார். இவருக்கு முக்கியப் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது.

“உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப் பொருள்களை ஜாபர் சாதிக் பல்வேறு நாடுகளுக்கு கடத்தியுள்ளார். போதைப் பொருள் கடத்தல் பணத்தை அரசியல் கட்சிகளுக்கும் வழங்கியிருப்பதாக தகவல் உள்ளது.

“போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணத்தில் சென்னையில் ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இயக்குனர் அமீருக்கு ரூ.3 கோடி கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.