சென்னை

சென்னை நகரில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு கைதானவர் என்கவுட்ண்டரில் மரணம் அடைந்தார்/

சென்னை நகரில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்தனர், இதையொட்டி காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று காலை விமான நிலையத்தில்  இந்த சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன் என்பவர் கைது செய்யப்பட்டார்.  இவ்வாறி  கைது செய்யப்பட்டவரை, விசாரணைக்குப் பிறகு தரமணி ரயில் நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்க போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்

அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்ப முயன்ற போது, காவல் ஆய்வாளர் முகமது புகாரி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இந்த என்கவுடரில் சென்னையில் நேற்று தொடர் செயின் பறிப்பு சம்பவங்களின் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன், உயிரிழந்துள்ளார்