சென்னை:
புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் இன்று 4வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சேப்பாக்கம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வந்து, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள ஜெ.பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள உள்ள நிலையில், சேப்பாக்கத்தில் ஜாக்டோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த 21ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 4ஆம் நாளாகச் சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அடுத்த வாரம் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.