ஷாங்காய்

பிரபல வங்கியாளர் ஜாக் மா அறிவித்துள்ள 3 நிமிட கடன் திட்டம் சீனாவின் வங்கி பணியில் புதிய சாதனை படைத்துள்ளது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி 13 லட்சம் கோடி டாலர்களாக உள்ளது.   இந்த வளர்ச்சி கடந்த 1992 முதல் தொடர்ந்து வருகிறது.   இதற்கு முக்கிய காரணம் அரசு சாராத சிறு தொழிலதிபர்களே காரணம் ஆவார்கள்.   பொருளாதார வளர்ச்சியில் அவர்களின் பங்கு மட்டும் சுமார் 60% ஆகும்.   அத்துடன் 80% தொழிலாளர்களுக்கு இவர்களே வேலை வாய்ப்பு அளிக்கின்றனர்.

சீனாவில் சிறு தொழிலதிபர்களுக்குத் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் உதவி அளித்து வந்தன.   இந்த கடனுக்கான கடும் வட்டி காரணமாகத் தொழிலதிபர்கள் மிகவும் துயருற்று வந்தனர்.  பிரபல வங்கியாளரும் அலிபாபா நிறுவன உரிமையாளருமான ஜாக் மா தனது மை பேங்க் வங்கி மூலம் சிறு தொழிலதிபர்களுக்குக் கடன் அளிக்க முன் வந்தார்.  அதற்கு அரசின் உதவியைக் கோரினார்.

ஜாக் மா கோரிக்கையின் படி அரசு அனைத்து சிறு தொழிலதிபர்களின் விவரங்கள் அடங்கிய தகவல் மையம் ஒன்றை அமைத்தது.   அந்த விவரங்களின் அடிப்படையில் சிறு தொழிலதிபர்களுக்குக் கடன் அளிக்கும் திட்டம் ஒன்றை ஜாக் மா அறிவித்தார்.  அதன் படி கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.  இதற்கு கணினி மட்டுமின்றி ஸ்மார்ட் போன்களும் உதவி வருகின்றன.

செயற்கை நுண்ணறிவின் மூலம் இந்த விண்ணப்ப விவரங்கள்  மற்றும் கடன கேட்போரின் விவரங்கள் உள்ளிட்ட 3000 தகவல்கள் உடனடியாக சரி பார்க்கப்பட்டு கடன் தொகைக்கு உடனடியாக வங்கி ஒப்புதல் அளிக்கிறது.    இதற்கு ஜாக் மா 3 நிமிடக் கடன் எனப் பெயரிட்டுள்ளார்.   இந்த திட்டத்தின் மூலம் சீன வங்கி பரிவர்த்தனையில் புரட்சி ஏற்பட்டுள்ளதாகத் தொழிலதிபர்கள் தெரிவிக்கின்றனர்.