கொரோனா நிவாரண நிதியாக ரூ.7500 (1 பில்லியன் டாலர்) நிதி வழங்குவதாக பிரபல சமூக வலைதளமான டிவிட்டர் அறிவித்து உள்ளது. இதுகுறித்து, டிவிட்டரின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உள்ள வுகான் மாநிலத்தில் ஆரம்பித்த கொரோனா நோய்த்தோற்று தற்போது உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்திய, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் கடுமையாக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த வைரஸ் பரவலை தடுக்க கோடிக்கணக்கான நிதிகள் தேவைப்படுவதால், உலக நாடுகள் பல்வேறு தொழில் நிறுவனங்கள், அமைப்புகளிடம் நிதி கோரி வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, சர்வதேச கொரோனா நிதிக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி அளிக்க உள்ளேன். என்று, டிவிட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி அவரது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.
மேலும், ஸ்கொயர் நிறுவனத்தில் தனக்கு இருக்கும் தனது பங்குகளை ஸ்மார்ட்ஸ்மால் நிறுவனத்திற்கு மாற்ற உள்ளேன்.( இது அவரது சொத்து மதிப்பில் 28 சதவீதம்) கொரோனா முடிந்த பின்னர், பெண்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.