வாஷிங்டன்: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன கொரோனா பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக 85 சதவீதம் செயல்திறன் கொண்டது என ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், பிறழ்வு தொற்றான ஒமிக்ரான பரவலை தடுக்க, கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய மாறுபாடு வைரசான ஒமிக்ரான் பரவலை தடுக்கும் முயற்சிகளில் உலக நாடுகள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றன. இதில், அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் பூஸ்டர் தடுப்பூசி மைக்ரான் தொற்றுக்கு எதிராக நன்கு செயல்படுகிறது என தென் ஆப்பிரிக்கா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஒமிக்ரான் தொற்று அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரபல நிறுவனம், இதுதொடர்பாக ஆய்வு நடத்தியது. அங்குள்ள மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. இதில் ஜான்சன் அண்ட் ஜான்சன் பூஸ்டர் தடுப்பூசியில் 85 சதவீதம் செயல் திறன் உள்ளது தெரிய வந்துள்ளதானது என அறிவித்து உள்ளது.
இந்த ஆய்வுகள் கடந்த நவம்பர் மாதம் 15 முதல் டிசம்பர் 20 வரை நடத்தப்ட்டதாகவும், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு, சுமார் 9 மாதத்துக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய முதல் 13 நாட்களில் 65 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி ஏற்பட்டது என்றும், இரு மாதத்துக்கு பிறகு 85 சதவீதம் எதிர்ப்பு சக்தி உருவாகிறது என்றும் ஆய்வு முடிவில் தெரிய வந்திருப்பதாக கூறியுள்ளது.
மேலும், இரண்டு டோஸ் ஃபைசர் தடுப்பூசியின் பூஸ்டர் ஷாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை 70% குறைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.