நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Must read

ஜம்மு-காஷ்மீர்:
நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஜுமாகுண்ட் பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதி போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் ஊடுருவ முயன்ற லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் ராணுவத்தினர் கைப்பற்றினர்.

More articles

Latest article