புதுடெல்லி:
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா இருப்பது சோதனை மூலம் தெரிய வந்துள்ளது. இதனால், அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகது.