நியூயார்க்:

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகளும், வெள்ளை மாளிகை ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் பெயர், உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.


இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக உலக வங்கியை அமெரிக்க உருவாக்கியது.

இந்த வங்கியின் தலைவரான ஜிம் யாங்க் கிம் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்பின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதாரம் குறித்த அறிவு அவரிடம் இல்லை என்று கூறப்பட்டாலும், இவாங்கா ட்ரம்ப் தொழிலதிபராக இருந்திருக்கிறார். இந்த அனுபவமே போதும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

அவரது தந்தையின் நிறுவனத்தை நிர்வகித்த அனுபம் அவருக்கு இந்த பதவியை வகிக்க கைகொடுக்கும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது.

ஐநா சபை தூதுவராக இவாங் ட்ரம்பை நியமிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுவந்தது.

வாரிசு அரசியல் என்ற ஆயுதம் கையில் எடுக்கப்பட்டதால், அந்த முடிவை டொனால்டு ட்ரம்ப் கைவிட்டார். அரசுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹீத்தர் நாவுட் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இவாங்கா ட்ரம்ப் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவர் தவிர, சர்வதேச விவகாரத்துறை செயலர் டேவிட் மல்பாஸ். முன்னாள் ஐநா தூதுவர் நிக்கி ஹாலி உட்பட சிலரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.