டில்லி:
நேற்று முன்தினம் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தபோது, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி வரவேற்பு அளித்தது குறித்து, இதுகுறித்து கருத்து தெரி வித்திருந்த உ.பி. முதல்வர் மோடி, முஸ்லிம் கட்சி நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் என்று விமர்சித்து இருந்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், யோகிமீது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயலாளர் கொர்ரம் அனிஸ் ஓமர் (Khorrum Anis Omer ) தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு கொடுத்தார். யோகி தங்கள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கூறியுள்ளார் என்று கூறி, அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தில் வயநாட்டில் கடந்த 4ந்தேதி மனு தாக்கல் செய்தார். அவருக்கு காங்கிரசின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பாகிஸ்தான் கொடியைப்போல உள்ள அவர்கள் கட்சி கொடியுடன் வரவேற்றனர்.
இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்த உ.பி. முதல்வர் யோகி, முஸ்லீம் லீக் கட்சி ஒரு வைரஸ். இந்த வைரசால் பாதிக்கப்பட்ட யாரும் தப்பிக்க முடியாது. இன்று நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசை அந்த வைரஸ் தாக்கியுள்ளது.
இப்போது அக்கட்சி தேர்தலில் வென்றால் என ஆகும்? நாடு முழுவதும் அந்த வைரஸ் பரவும். 1857ல் சுதந்திர போரின் போது நாடே சிப்பாய் மங்கள் பாண்டேவின் பின்னால் ஆங்கிலேயருக்கு எதிராக திரண்டது. அப்போது முஸ்லீம் லீக் என்ற வைரஸ் உருவானது. அது நாட்டை இரண்டாகப் பிரித்தது. இப்போது காங்கிரஸ் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் எல்லா இடங்களிலும் பச்சை கொடிகள் முளைத்துள்ளது. ஜாக்கிரதை! என குறிப்பிட்டுள்ளார்.
யோகியின் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி குறித்த விமர்சனம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.