சிவகங்கை:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் ஸ்டாலி,ன  மத்தியில் தற்போது இருக்கும் மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்தும் நேரம் வந்து விட்டது, இது அதற்கான நேரம் என்று  பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசினார்.

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின், இன்று  சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது, சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், தகுதி அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டு, இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்… நீங்கள் நினைப்பதுபோல, அவருக்கு  வாரிசு அடிப்படையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றார்.

இதே தொகுதியில் பாஜக சார்பில் நிற்கும் வேட்பாளர் ராஜா குறித்து நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை..என்றவர், இவரைப்போலகடைந்தெடுத்தவரை இந்தியாவிலோய பார்த்ததில்லை என்றும் பொய்களையே பேசுவதுதான் ராஜாவின் பணி, மோசமான அரசியல் வாதி. என்று கடுமையாக தாக்கி பேசியவர், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது,  எச். ராஜா பாராளுமன்றத்திற்கு போனால் சிவகங்கை தொகுதிக்கே அவமானம், எனவே கார்த்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும்… அவருக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.