டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என அடுத்தடுத்து 4 பதக்கங்களை வென்றுள்ளதற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
2020ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இன்று நடைபெற்று வரும் 7வது நாள் போட்டியில் அடுத்தடுத்து 4 பதக்கங்களை இந்தியவீரர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது. வெற்றி பெற்ற வீரர்கள் குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டில், டோக்கியோ 2020 பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்க மழை பெய்கிறது, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்கள் தேசிய விளையாட்டு தினமான இன்று, இந்திய வீரர்கள் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஹைஜம்ப் டி 47 மற்றும் டிஸ்கஸ் த்ரோ எஃப் 52 ஆகியவற்றில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று ஆசிய சாதனை படைத்துள்ளது எச்.நிஷாத் மற்றும் வினோத் குமாருக்கு வாழ்த்துக்கள்.
வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற AvaniLekharaவுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகவும், . உங்கள் அபாரமான சாதனையால் நான் மகிழ்ச்சி யடைகிறேன் என்றும், டிஸ்கஸ் த்ரோவில் யோகேஷ் கத்துனியாவின் வெள்ளிக்கு வாழ்த்துவதாகவும், DevJhajharia, Sundar S Gurjar
ஜாவெலின் F46 இல் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வாழ்த்துவதாகவும் தெரிவித்து உள்ளார்.