கட்சியில் யார் இருந்தாலும் போனாலும் நாட்டுக்கு ஒன்றும் இல்லாத விஷயம் என்று சீமான் கூறியுள்ளார்.

நா.த.க. கட்சியில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் முக்கிய நிர்வாகிகள் பலர் விலகினர்.

இதுகுறித்து சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்த சீமான் “இது இலையுதிர் காலம்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் காளியம்மாள் விலகியதை அடுத்து மொட்டை மரமாக விடப்பட்டார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் நா.த.க. கட்சியில் இருந்து காளியம்மாள் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து விலகுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சீமான், “கட்சியில் பல பேர் சேர்வார்கள் பின்பு விலகுவார்கள், இதனால் நாட்டுக்கு என்ன பிரச்சனை” என்று பதில் கேள்வி எழுப்பினார்.