டெல்லி

இந்தியாவில் குறைந்தது 10 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதே நல்லது என புகழ்பெற்ற மருத்துவ இதழாசிரியர் ரிச்சர்ட் ஹார்டன் கூறியுள்ளார்.

கொரோனாத் தொற்றால் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் பெரும் உயிர்ச் சேதங்களை சந்தித்து வருகிறது.  இந்தியாவும் மே3 வரை ஊரடங்கை நடைமுறை படுத்தியுள்ளது.

இந்நிலையில் உலகின் புகழ்பெற்ற மருத்துவ இதழான ‘தி லான்செட்’ இதழின் முதன்மை ஆசிரியர் டாக்டர் ரிச்சர்ட் ஹார்டன் இந்திய சூழல்  குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“தயவு செய்து ஊரடங்கை தளர்த்தாதீர்கள். குறைந்தது 10 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டியுங்கள். இல்லாவிட்டால் கொரோனாத் தொற்று இந்தியாவில் இரண்டாம் கட்டத்திற்கு சென்றுவிடும். அது தற்போதைய சூழலை விட மிக மோசமானது” எனக் கூறியுள்ளார்.

“மேலும் குறைந்தது 10 வாரங்களுக்கு தற்போதைய இந்த ஊரடங்குச் சூழலை  மாற்றுவது தொடர்பாக யோசித்து உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். அது மிகவும் ஆபத்தானது” என ரிச்சர்ட் எச்சரித்தார்.