சென்னை
டில்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வருவோரைச் சோதனை செய்வதும் தனிமைப்படுத்துவதும் மிகவும் கடினம் என தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மிக மிக அதிகமாக உள்ளது. இதுவரை 8002 பேர் பாதிக்கபட்டுள்ளானர் குறிப்பாகச் சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4372 ஐ எட்டி உள்ளது. இந்நிலையில் இன்று முதல் இந்திய ரயில்வே டில்லிக்கும் மற்றும் டில்லியில் இருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் சென்னைக்கு ரயில் மற்றும் விமானச் சேவைகளை வரும் 31 ஆம் தேதி வரை அனுமதிக்க வேண்டாம் என பிரஹ்டம்ர் மோடியுடன் நடந்த வீடியோ கானப்ரன்சிங் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். ஆனால் முதல்வரின் கோரிக்கையை ஏற்காத ரயிவ்லே அமைச்சகம் ரயில் சேவையைத் தொடங்கி உள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரயில்வே அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில்,” டில்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வரும் பயணிகளுக்குச் சோதனை செய்வது மற்றும் தனிமைப்படுத்துவது என்பது மிகவும் கடினமானதாகும். எனவே ரயில்களை இயக்க வேண்டாம் என நாங்கள் மறுப்பு தெரிவித்தோம்.
ஆனால் மத்திய அரசு நாங்கள் மறுப்பு தெரிவித்தும் ரயில்களை இயக்கி வருகிறது. ஆகவே ரயில்களில் வருபவர்களைச் சோதிப்பது மற்றும் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட பொறுப்புக்களைத் தமிழக அரசு ஏற்காது. அவற்றை ரயில்வே துறை ஏற்க வேண்டும்” என கண்டிப்பாகத் தெரிவித்துள்ளார்.