இத்தாலி நிலநடுக்கம்: இறந்தவர்களுக்கு அஞ்சலி!

Must read

 
அமட்ரிஸ்:
த்தாலியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களுகாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்நாட்டு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் நோர்சியா என்ற நகரை மையமாகக் கொண்டு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தாலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுமார் 80-க்கும் மேற்பட்ட அதிர்வுகளாலும் சிறிய நகரங்களும், கிராமங்களும் சின்னா பின்னமாகின.
itali
இத்தாலியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் பாதி நகரமே காணவில்லை என்று இத்தாலியின் அமட்ரிஸ் நகர மேயர் செர்ஜியோ பெரோசி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நில நடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 300க்கும் அதிகமான. . இது அந்நாட்டில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், நிலநடுக்கத்தால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இத்தாலி நாட்டில் கொடி கம்பங்கள் பாதியில் பறக்க விடப்பட்டன.
இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா, பிரதமர் மட்டியோ ரென்ஜி மற்றும் அந்நாட்டு தலைவர்கள் பலர் அஸ்கோலி பிசெனோவில் உள்ள விளையாட்டு ஹாலில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து பேசிய அதிபர்,  நிலநடுக்கத்தின் போது மீட்பு நடவடிக்கை களில் ஈடுபட்ட 4 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்களுக்கு அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா பாராட்டு தெரிவித்தார்.
 

More articles

Latest article