ரோம்

ரு ஏழை தனது பசியைப்  போக்க சிறிதளவு உணவைத் திருடுவது குற்ற நடவடிக்கை இல்லை என இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இத்தாலி மக்களை வறுமை மிகவும் வாட்டி வருகிறது.  சமீபத்திய கணக்கின்படி ஒவ்வொரு நாளும் 615 பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே செல்கின்றனர்.  இந்த மக்கள் உணவு கூட கிடைக்காமல் வாடுகின்றனர்.  இதனால் ஒரு சிலர் பசிக் கொடுமையால் உணவுப் பொருட்களைத் திருடிப் பசியாறும் நிலைக்கு வந்துள்ளனர்.   இவர்களில் உக்ரேனிய பகுதியைச் சேர்ந்த ஆஸ்ட்ரியாகோவ் வீடின்றி தெருவில் வசித்துவந்துள்ளர்

கடந்த 2011 ஆம் வருடம் ஆஸ்டியாகோவ் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இரண்டு ரொட்டிகள் வாங்கி விட்டு இரு துண்டு சீஸ் மற்றும் ஒரு பாக்கெட் சாஸ் ஆகிய்வைற்றை மறைந்து எடுத்து வந்துள்ளார்.  அவர் ரொட்டிக்கு மட்டும் பணம் கொடுப்பதை உடன் வந்த மற்றொரு வாடிக்கையாளர் பார்த்து காவலரிடம் புகார் அளித்ததுள்ளார். அதையொட்டி ஆஸ்டிரியாகோவ் கைது செய்யப்பட்டு 2015 ஆம் வருடம் அவருக்கு 100 யூரோ அபராதமும் ஆறுமத சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது.

இதையொட்டி நடந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழஙக்பட்டுள்ள்து.  அதில். “அனைத்து மனிதருக்கும் ஏழ்மையை எதிர்த்து உயிர் வாழும் உரிமை உள்ளது.  ஒரு நாகரிகமடைந்த நாட்டில் எந்த ஒரு மனிதனும் பசியால் அவதிப்படக்கூடாது.   இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டவர் தனது பசிக்காக 5 யூரோவுக்கும் குறைவான மதிப்பில் உள்ள பொருளைத் திருடி உள்ளார்.   இதற்காக நீதிமன்றம் 3 கட்ட விசாரணையை நடத்தி உள்ளது.

ஒரு மனிதர் தனது பசியைப் போக்கச் சிறிதளவு உணவைத் திருடுவதைக் குற்றம் எனக் கருத முடியாது.  அது ஒரு குற்றவியல் நடவடிக்கை கிடையாது.  அவரை இதற்காக தண்டிப்பது மிகவும் மனிதாபிமானமற்ற செயலாகும்.  அவர் உயிர் வாழ வேறு வழியின்றி இந்த செயலை செய்துள்ளார்.  எனவே அவருடைய தண்டனை ரத்து செய்யப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.