ஈரோடு
டாஸ்மாக் மதுக்கடையை எதிர்த்து போராடியவர்களை கடுமையாக தாக்கிய டி.எஸ்.பி. பாண்டியராஜனை கண்டித்து பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தனது முகநூல் பக்கத்தில், நடிகர் ரஞ்சித், “நம் அன்பு தாயுள்ளங்களை அடித்த இவன் கையை படீர் என உடைத்தெறிய துடிக்கிறது மனது…..
இவன் வேலைக்கு ஓலை தரும் வரை
ஓயாது பகிருங்கள் என் சிங்கங்களே..
பாடைக்கு செல்லும் முன் பாடம் கற்பிப்போம் இவனை போன்றோர்க்கு..” என்று பதிவிட்டுள்ளார்.

அதோடு டி.எஸ்.பி. பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சியாமளாபுரத்தில் நடக்கும் போராட்டத்திலும் கலந்துகொண்டிருக்கிறார். அந்த வீடியோ காட்சியையும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel