சென்னை:  வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சென்னையில் போத்தீஸ் ஜவுளி நிறுவனம், கோல்டு ஜுவல்லரி மற்றும் உரிமையாளர்களின் வீடுகள் என பல  இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் போத்தீஸ் கடைகள் மூடப்பட்டு உள்ளன.

போத்தீஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு புகாரை அடுத்து உரிமையாளர், மகன்கள் வீடுகள் மற்றும் பல கிளைகளில் என 25க்கும் மேற்பட்ட இடங்களில் செப்டம்பர் 12ந்தேதி முதல் வருமான வரித்துறை  சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையால் கடைகள் இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது.

12ந்தேதி தொடங்கப்பட்ட வருமான வரித்துறையினரின் சோதனை இன்று 5வது நாளாக தொடர்கிறது. போத்தீஸ் நிறுவனங்களின் சென்னை, கோவை, நெல்லை உள்பட அதன் அனைத்து கிளைகள், கிடங்குகள்,  ஆர்.ஏ.புரத்தில் போத்தீஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ் மூப்பனார் வீட்டு அவருக்கு சொந்தமானவர்கள் மற்றும் முக்கிய நபர்களின் வீடுகளில்  வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

மெலும்,  தியாகராயர் நகரில் உள்ள போத்தீஸ் கார்ப்பரேட் அலுவலகம், கிடங்கு, ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோதனைகள் முடிந்த பிறகே, அங்கு எவ்வளவு வரி முறைகேடு நடைபெற்றுள்ளது, எவ்வளவு கணக்கில் வராத பணம் கைபற்றப்பட்டு உள்ளது என்பது தெரிய வரும்.

போத்தீஸ் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை…